ஆறாவது திணை!
கலிமா
தொழுகை
சக்காத்
நோன்பு
ஹஜ் - என்று
இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து
ஆறாவது - நபிகள் பேரில் சலவாத்!
மெய்
வாய்
கண்
மூக்கு
செவி - என்று
உறுப்புக்கள் ஐந்து
ஆறாவது - நபிகள் நாயக அறிவு!
சுபுஹு
லுஹர்
அசர்
மக்ரிப்
இஷா - என்று
தொழுகைகள் ஐந்து
ஆறாவது - தஹஜ்ஜத்!
முல்லை
குறிஞ்சி
மருதம்
நெய்தல்
பாலை - என்று
திணைகள் ஐந்து
ஆறாவது - நபிகளின் ரவ்லா !
நீர்
நிலம்
காற்று
நெருப்பு
ஆகாயம் - என்று
பஞ்ச பூதங்கள் ஐந்து
ஆறாவது - மிஹ்ராஜ்!
எத்தனை அளவிட்டு
ஒன்றைச் சொன்னாலும்
அத்தனையும் தாண்டி
புனிதமாய் ஓன்று முளைக்கும்
அதைப்
புரிந்து கொண்டால்
பெருமானாரின் மகத்துவம்
மனதுக்குள் விளங்கும்!
அது -
அவதாரப் புருடரின்
ஆன்மிகம் அல்ல
மானுட புனிதத்தின் மான்மியம்!
ஆதம் நபி முதல்
ஈசா நபிவரை
அஹமது நபிகள்
சாட்சி சொல்லும் சத்தியம்!
புகழக் கூடாது என்று
சிலர் சொல்பவரைப்
புகழுக்குரியவனே
'புகழப் பட்டவர்' - என்று
பெயர் சூட்டிய வரலாறு!
ஓரறிவு மரம் முதல்
ஐயறிவு ஒட்டகம் வரை
அவர்களை அறிந்திருந்தது!
கல்லுக்கும்
அறிவிருந்த காரணத்தால்
அதுவும் அவர்கள்
கைகளில் தஸ்பீஹு செய்தது!
நாயகத் தோழர்களுக்கு
நபிகள் நாயகத்தின்
நகத்துண்டுகளும்
வியர்வைத் துளிகளும்
அவர்களை நரகிலிருந்து
காக்கும் கேடயமானது!
இவ்வுலகி மட்டுமல்ல
இறப்பில்லா மறுமையிலும்
சிறப்பாகி நிற்பது -
இறப்பில்லா எங்கள் நபிகளின்
புகழ்ப்பெயரும்
புகழ்க் கொடியும்தான் !
அவர்களது
பிறப்பும் இறப்பும்
நமது சுவனங்களை
உயிர்ப்பிக்கச் செய்யும் ஜனனம்!
எங்கள் சுவனங்களைத்தாம்
இந்த மீலாதுகளில் அலங்கரிக்கிறோம்!
அதன்வழி
எங்கள் இம்மையும் புனிதமாகிறது அல்லவா?
-Vavarfakirmohamed athavullah
நன்றி - இனிய திசைகள்
நன்றி - இனிய திசைகள்