அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அற்புத வரலாறு
மக்கா வெற்றி
ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு ரமளான் மாதம்
நற்றவப் பதியா மக்க நகருறுங் குபிரர் மாயச்
செற்றடல் விளைத்த தூதர் குறை´க டிரளை நோக்கி
யிற்றையி லுங்க டம்மையயன் செய்வோ மியாமென் னுள்ளத்
துற்று ணர்ந் தனிரோ வென்னக் கேட்டன ருவகை பொங்க.
கோத்திரத் துயர்ந்தோர் முந்நீர் குலவுல கேழும் விண்ணுங்
காத்தவர் சங்கை மானீர் கருத்துவந் தும்மை யீன்ற
பாத்திபர் தாமு மேன்மை படைத்தவ ரதனால் வாய்மை
நாத்தவ றாத நீர்தா னன்மையே செய்வீ ரென்றார்.
நன்றிநீர் செய்தீ ரென்ன நன்மொழி கேட்டெல் லோரு
மின்றுதொட் டுரிமை யுங்கட் கிடும்பெயர் துலக்கா வுள்ள
மொன்றுபட் டீமான் கொள்ளு மென்றனர் கலிமா வோதி
மன்றல்சேர் நபியை யேத்தி யவரவர் மனையிற் புக்கார்.
ஹுதைபிய்யா உடன்படிக்கையில் முஸ்லிம்களும், குறை´களும் அவரவர்களுக்கு இஷ்டமானவர்களுடன் உடன்படிக்கை செய்து கொள்ளலாம் என்ற நிபந்தனை இருந்தது.
அதன்படி முஸ்லிம்கள், குறை´களுடன் சிநேகிதமாயிருப்பவர்களுடனும் குறை´கள் முஸ்லிம்களுடன் சிநேகிதமா யிருப்பவர்களுடனும் சண்டை செய்வது கூடாது. ஹுதைபிய்யா உடன்படிக்கை முடிந்ததும் குஸாஆ என்னும் கூட்டத்தார் முஸ்லிம்களுடனும், பனுபக்கர் என்னும் கூட்டத்தார் குறை´களுடனும் நட்பு உடன்படிக்கை செய்து கொண்டார்கள். இவ்விரு கூட்டத்தாருக்கும் வெகு காலமாகப் பகைமை இருந்து வந்தது.
ஹுதைபிய்யா உடன்படிக்கையாகி மூன்று ஆண்டுகளுக்குள்ளாக பனுபக்கர் கூட்டத்தார் தங்களுடைய பழைய விரோதிகளாகிய குஸாஆக் கூட்டத்தாரை நசுக்கிவிட வேண்டுமென்ற எண்ணத்துடன் அவர்களைத் தாக்கினார்கள். குறை´களும் தாங்கள் செய்த உடன்படிக்கையை மறந்து அவர்களுக்கு இரகசியமாக உதவி செய்து வந்தார்கள். இக்ரிமா இப்னு அபூஜஹ்ல், ஸப்வான் இப்னு உமையா, ஸுஹைல் இப்னு அம்ரு போன்ற குறை´த் தலைவர்கள் மாறுவேடம் பூண்டு பனுபக்கர் கூட்டத்தாருடன் சேர்ந்து சண்டை செய்தார்கள்.
அவர்கள் அன்றும் அதற்கடுத்த நாளும் வெகு வீரத்துடன் போர் செய்தார்கள். அவர்கள் கையில் அன்று எட்டு வாள்கள் வரை முறிந்து போயின. அவர்களுடைய ஊக்கத்தினால் முஸ்லிம் சேனைக்கு அதிக உற்சாகமுண்டாயிற்று. முஸ்லிம் சேனையைப் பல பாகங்களாய்ப் பிரித்து அங்குமிங்கும் பல விதமாகத் திருப்பியதில் முஸ்லிம் சேனையின் தொகை ஏராளமாக இருப்பதாகத் தோன்றிற்று.
முஸ்லிம்களுக்கு உதவியாக வேறு சேனை வந்து சேர்ந்திருக்கும் என்று பகைவர்கள் எண்ணிக் கொண்டார்கள். அன்று முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்தது. பகைவர்கள் தோற்கடிக்கப்பட்டு ஓடிவிட்டார்கள். அவர்கள் எண்ணிக்கையில் பல மடங்கு அதிகமாயிருந்ததால் முஸ்லிம் சேனையில் நஷ்டம் ஏற்படும் என்று நினைத்து முஸ்லிம்கள் பின் தொடராமல் மதீனாவிற்குத் திரும்பி விட்டார்கள். அச்சண்டையில் முஸ்லிம்கள் சொற்பப் பேர்தான் ஹீதானார்கள்.
மூத்தா போர் நடந்து கொண்டிருக்கும்போதே அங்கு நடக்கும் சம்பவம் முழுவதும் அல்லாஹ்வினால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. முஸ்லிம் வீரர்கள் வெகு திறமையுடன் போர் புரிந்து கொண்டிருப்பது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் காட்டப்பட்டது.
போர்க்களத்திலிருந்து செய்தி வருவதற்கு முன்னதாகவே போர் முனையில் ஸைத், ஜஅபர், அப்துல்லா இப்னு ரவாஹா (ரலி) ஆகிய மூவரும் முறையே தலைவராயிருந்து சண்டையை நடத்தி உயிர் துறந்தார்களென்றும் காலித் (ரலி) அவர்கள் தலைமைப் பொறுப்பைப் பெற்ற பின் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றியைக் கொடுத்தான் என்றும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவிலிருந்தபடியே மக்களுக்கு அறிவித்தார்கள்.
சேனைத் தலைவர்கள் உயிர்துறப்பதைப் பற்றிப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போருக்கு அனுப்புமுன் கூறிய முன்னறிக்கைப்படியே எல்லாம் நிறைவேறிற்று.
இப்போரில் முஸ்லிம்களுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்த போதிலும் அவ்வெற்றியினால் பெரிய மகிழ்ச்சி ஏற்படவில்லை. இளம் வயதினராயிருந்த ஜஅபர் (ரலி) அவர்கள் மறைவு அளவிடக்கூடாத துயரம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மிகுந்த கவலையைக் கொடுத்தது.
ஜஅபர் (ரலி) அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தையுண்டு. ஸைத் (ரலி) அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையுண்டு. இக்குழந்தைகளைப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்த்தவுடனும், குழந்தைகளைக் கையிலெடுத்தவுடனும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக ஓடும்.
மூத்தா போரில் ஏற்பட்ட தோல்விக்குப் பழிவாங்க வேண்டுமென்ற உத்தேசத்துடன் ர்ஜீல் பக்கத்தில் உள்ள கிறிஸ்தவக் கூட்டத்தார்களையயல்லாம் ஒன்று சேர்த்துக் கொண்டிருந்தான். இதே சமயம் அநேகர் அவனுக்கு உதவி செய்வதாய்ச் சொல்லியிருந்தார்கள்.
ஷாம் எல்லைப் புறத்திலுள்ள ஓர் ஊரில் பதினைந்து முஸ்லிம்கள் சென்று கிறிஸ்தவ மக்களின் மத்தியில் இஸ்லாத்தைப் பற்றிப் போதனை செய்து கொண்டிருந்தார்கள். தங்களை இஸ்லாத்திற்கு அழைப்பதைப் பற்றி அக்கூட்டத்தார் கோபங்கொண்டு பதினைந்து பேரில் ஒருவரை மட்டும் விடுத்து மீதமுள்ளவர்களையயல்லாம் அம்பினாலெய்தும், சித்ரவதை செய்தும் கொன்றுவிட்டார்கள்.
இச்செய்தி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அளவுகடந்த வருத்தத்தைக் கொடுத்தது. அதற்குப் பரிகாரம் தேட வேண்டுமென்ற உத்தேசத்துடன் புறப்படும் போது அக்கிறிஸ்தவர்கள் அனைவரும் அந்நாட்டை விட்டு ஓடிப்போய் விட்டார்கள் என்று தெரிந்து அங்கு போகாமலிருந்து கொண்டார்கள்.
ஹலரத் திஹ்யத்துல் கல்பீ (ரலி) அவர்கள், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கடிதத்தை கெய்சர் அரசருக்குச் சமர்ப்பித்து, கெய்சர், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கொடுத்த வெகுமதிகளுடன் மதீனாவிற்குத் திரும்பி வரும்போது ஜீஸம் என்னும் கிறிஸ்தவக் கூட்டத்தார் அவரை வழிமறித்து அவரிடமிருந்தவைகளை யயல்லாம் அபகரித்துக் கொண்டார்கள்.
ஆனால் அதே சமயம் கிறிஸ்தவர்களில் சில தலைவர்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள். கஸ்ஸான் கூட்டத்தின் தலைவரான ஹப்லா என்பவர் முஸ்லிமானார். ஸிரியான் மாநிலத்தில் அம்மான் பிரதேசத்தில் கவர்னராயிருந்த பத்வா என்பவரும் இஸ்லாத்தில் சேர்ந்து, தான் முஸ்லிமாய் விட்டதாய்ப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எழுதி அனுப்பியதோடு, அநேக விலை உயர்ந்த பரிசுகளையும் கொடுத்தனுப்பினார்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அக்காணிக்கைகளை அங்கீகரித்துக் கொண்டு ஆத்ம விருத்திக்காக அவர் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களை எழுதியனுப்பினார்கள். ரோம தேச ஆட்சிக்குட்பட்டிருந்த பத்வா என்னும் அவ்வதிபதி முஸ்லிமான செய்தி ரோம அரசாங்கத்திற்குத் தெரிந்தது.
இஸ்லாத்தை அவர் விட்டுவிடும்படிச் செய்வதற்காக அவ்வரசாங்கத்தார், நயத்தினால் கூடியவரை பார்த்தார்கள். அவருக்கு மேலான பதவிகளைக் கொடுப்பதாக ஆசை காட்டினார்கள். ஆனால் இஸ்லாத்தின் முன் அப்பதவிகளெல்லாம் அவருக்குத் துச்சமாகத் தோன்றின. இஸ்லாம், இவ்வுலகத்திலுள்ள பாக்கியங்கள் எல்லாவற்றிலும் மிக அருமையானதென்றும், தம்முடைய உயிரை விடவும் அது மேலானது என்றும் கூறிவிட்டார்!
(தாஹா நபியின் புனிதபாதம் பணிவோம்...)