• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

உமர் (ரலி) புராணம்


ஆசிரியர்

ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா அல்ஹா´மிய் நாயகம் அவர்கள்



அகழ்யுத்தம்


(கலிவிருத்தம்)



இனத்தவ ரறிகில ரிஸ்லா மாயினர்

    சினத்தவ ரிகறமை  சிதைத்திட வேண்டும்

எனத்தவ நபிக ளிசைந்து செப்பி

    பனத்தவ ரெவரோ பகைந்திட வேண்டும்



கொண்டுகூட்டு:


இனத்தவர் அறிகிலர் இஸ்லாம் ஆயினர். சினத்தர் இகல் தமை சிதைத்திட வேண்டும். எனத்தவ நபிகள் இசைந்து செப்பி பனத்து அவர் எவரோ பகைந்திட வேண்டும்



பொருள்:


இனத்தவர்கள் அறியாதபடி நஈம் இஸ்லாமாயினர்.  சினங்கொண்டவர்களாகப் பகைவர்களை நாலாபக்கமும் சிதைய சிதைத்திட வேண்டும் என்றவாறு தவத்தையுடைய நபிகள் நாதர் இசைவுடன் சொல்லி, அவர்களில் தற்பெருமை  கொண்ட தலைவர்களாக எவர்கள் இருக்கிறார்களோ அவர்களைப் பகைத்துவிட வேண்டும் (என்றார்கள் நபிகள் நாதர்)



குறிப்பு:   


இனத்தவர் : சொந்தக்காரர்அறிகிலர் : அறியாதபடி சினம் கோபம்இகல் : பகைவர்இசைந்து : விரும்பி, உடன்பட்டு, பொருந்துதல்செப்பல் சொல்லல்பனத்தவர் : பனம் + அத்து + அவர் : தற்பெருமை கொண்டவர்; தலை பருத்தவர்.