• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

புகழ்வோமே பூமான் நபியை



புகழ்வோமே பூமான் நபியை

நன்றியுள்ள மாந்தர்களே

தென்றல் நபி நாயகரை

என்றென்றும் புகழ்ந்திடுவீர்

நன்றியதும் புரிந்திடுவீர்!



நபியே தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக.

ரஸூலே தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக.

இறையவனின் நட்புடையோரே தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக.

அல்லாஹ்வின் ஸலவாத் தங்கள் மீதே.

நம் மீது பூரணச் சந்திரன் உதித்தது.

மற்றெல்லா மதிகளும் அதனால் மறைந்தன.

தங்கள் அழகு போன்றதை அறவே நாம் கண்டதில்லை.

சந்தோசத்தின் அல்லது திருப்தியின் அல்லது மகிழ்ச்சியின் வதனமே!

தாங்களே சூரியன் தாங்களே சந்திரன்.

தாங்களே ஜோதிக்கு மேல் ஜோதி.

தாங்களே உயிர்தரும்மருந்து. விலையுயர்ந்தவர்கள்அல்லது யவ்வனமுடையவர்கள்.

தாங்களே நெஞ்சங்களின் விளக்கு.

எம் உகப்புக்குரியவர்களே! எங்கள் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே!

மேற்கு கிழக்குத் திசைகளின் திருமாப்பிள்ளையே!

உதவி புரிகிறவர்களே! மகிமைக்குரியவர்களே!

இரு கிப்லாக்களின் தலைவரே!

தங்கள் திருமுகத்தைக் கண்டாரே அவர் சீதேவியானார். அல்லது அதிருஷ்டம் அடைந்தார்.

மாதா பிதாக்களின் சங்கையானவரே.

தங்கள் தடாகமோ தெளிவானது; குளிர்ச்சியானது.

நாம் உயிர்த்தெழும் நாளிலே எம் தாகத்தைத் தீர்க்கும் நீர்நிலை.

தாங்கள் பிழைகளை மிகப்பொறுப்பவர்கள்.

எம்மையழிக்கும் பாபங்களையும் பொறுப்பவர்கள். தாங்கள் கெடுதிகளை மூடி மறைக்கிறவர்கள்.

வழுக்கிவிடும் தவறுகளைச் சொல்லித் திருத்துகிறவர்கள்.

நல்லவர்களின் காரியகாரரே!

தரங்களில் உயர்ந்தவர்களே!

என் பாபங்களை என்னை விட்டும் மூடிவிடுங்கள்.

கெட்டவை (கெடுதிக)ளனைத்தைவிட்டும் நீக்கிவிடுவீர்களாக!

இரகசியங்களையயும் மறைந்தவைகளையும் நீங்கள் அறிந்தவர்கள்.

பிரார்த்தனைகளுக்கு விடை பகர்கிறவர்களே.

எல்லா நற்செயல்களைக்கொண்டும் (எல்லா நற்செயல்களைச் செய்யும் நல்லவர்களைக்கொண்டும்) இறைவா எம் அனைவருக்கும் கிருபை செய்வாயாக!