• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

உமர் (ரலி)புராணம்


ஆசிரியர்
ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா
அல்ஹாஷிமிய் நாயகம் அவர்கள்

அகழ்யுத்தம்

(கலிவிருத்தம்)

  
    இவ்வுறுத் தலினை இயற்றிடற் கியலா
  அவ்வகைத் துன்ப மடைந்தனர் நபிகள்
  நவ்விறை தனையே நாடி யிறைஞ்சி
  செவ்விதா நின்றனர் செம்மை நபிகளார்.

கொண்டுகூட்டு:

  (அகழ்ப் போரைச் சமாளிக்க முடியா தாகுமே) என்ற இவ்வுறுத்தலினை (தமக்கு ஏற்றிடற்கு இயலா அவ்வகைத் துன்பம் அடைந்தனர் நபிகள். நவ் இறை தன்னை ஏ நாடி இறைஞ்சி செவ்விதா நின்றனர் செம்மை நபிகளார்.

பொருள்:

  (அகழ்ப் போரை சமாளிக்க முடியாப் போகுமே என்ற மனதுக்குள் உள்ள) இவ்வுறுத் தலினால் (நபிகள் நாயகம் அவர்களுக்கு) ஏற்றுக் கொள்ள முடியாத அத்தகைய துன்பத்தை நபிகளார் அடைந்தனர். நன்மை அதிகம் தரக் கூடிய தெய்வத்தினை நாடிப் பிரார்த்தனை புரிந்து செம்மையாக நின்றனர் சிறப்பான நபிகளார்.

குறிப்பு:   

  உறுத்தல் : மன வழுத்தம். இயலாது : முடியாது. அவ்வகை : அந்த வகையான. நவ்வு : நன்மைதரக்கூடிய. இறைஞ்சி : பிரார்த்தித்து. செவ்விது : செம்மை. செம்மை : சிறப்பான, அழகு, செவ்வை.