Pezhai » 2015 » Jan2015 » அமுத மொழிகள்
பெருமானாருக்கு கண்ணியம் அளியுங்கள்
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குரிய அந்தஸ்தையும் மரியாதையையும் அளியுங்கள். ஏனெனில் நமக்கு அல்லாஹ்வைக் காட்டித் தந்தவர்களே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான்; எனவே தான் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குரிய கண்ணியத்தையும் மரியாதையையும் அளிக்க வேண்டும் எனக் கூறுகிறோம்.
இஸ்லாத்தை அது கற்பிக்கும் குணங்களால் பரப்ப முயல வேண்டும். இஸ்லாத்தில் நற்குணங்கள் அநேகம் உள்ளன. அவற்றைப் பேணுவதால் ஒரு முஸ்லிமின் அந்தஸ்து உயரும். நமது நற்குணங்களாலும், நற்காரியங்களாலும் எவரும் திருந்தும் வாய்ப்பு உள்ளது.
எனவே, உங்கள் நற்குணங்களை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நற்குணங்களைப் போன்று ஆக்கிக் கொள்ளுங்கள். பள்ளியில் பாங்கு சொல்லப்பட்டால் உடனே அருகில் உள்ள பள்ளிவாசலில் தொழுது கொள்ளுங்கள். ஐவேளை தொழுவது மிக முக்கியம். ஐவேளை தொழுவதால் உடல் சுத்தமாகிறது. முகம் ஒளிர்கிறது. எனவே எல்லா வகையிலும் தொழுகை மிக முக்கியம்.ஆதலால் தொழுகையைக் கடைப்பிடித்து வாருங்கள்.
சிறு குழந்தைகளுக்கு கலிமா, தொழுகை வியங்களைக் கற்பியுங்கள். திருக்குர்ஆனை ஓதி விளங்க வேண்டும். அதன்படி அமல் செய்ய வேண்டும். இன்றைய குழந்தைகளின் மனதில் பதிய வைப்பதுதான் நாளை சிறந்த சமுதாயத்திற்கு வித்திடும். இவ்வாறு ஷைகு நாயகம் பேசினார்கள்.
நன்றி : மணிச்சுடர் நாளிதழ் (1/2-12-1999)